2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேர் கைது

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 08:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமான முறையில் கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட 45 பேரை இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர்.

திருகோணமலை - குச்சவெளி கடற்பரப்பில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 11 ஆண்களும் 9 பெண்களும் உள்ளடங்குவதனுடன்,20 வயதுக்கு கீழ்பட்ட 25 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்கள் தற்போது குச்சவெளி காவல் நிலையத்தில் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்களை இன்றைய தினம் திருகோணமலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் குச்சவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .