2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

‘அர்ஜுன மஹேந்திரன் குறித்து சிங்கப்பூர் பிரதமருடன் பேச்சு’

Editorial   / 2019 மார்ச் 22 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில், சிங்கப்பூர் பிரதமருடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடி, கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.   

நாடாளுமன்றத்தில் நேற்று (21) இடம்பெற்ற, அமைச்சுக்களுக்கான குழுநிலை விவாதத்தின் போது, மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.   

அர்ஜுன மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வருவது தொடர்பில், தேவையான அனைத்து ஆவணங்கள், இராஜதந்திர நடவடிக்கைகள் தற்சமயம் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளதாக, அவர் கூறினார்.   

அத்துடன், தனிப்பட்ட ரீதியிலும், சிங்கப்பூர் பிரதமரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளதாகவும், எதிர்வரும் நாள்களில் ஜனாதிபதி தரப்பால் நாட்டுக்கும், சிங்கப்பூருக்கும் இது தொடர்பில் அறிவிக்கப்படுமெனவும், மஹிந்த அமரவீர இதன்போது தெரிவித்தார்.   

இதன் பின்னர் பதிலளித்த நளிந்த ஜயதிஸ்ஸ, அரசாங்கம் பதிலளிக்காமல், எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் பதிலளிப்பதாகவும், அர்ஜுன மஹேந்திரனை விடயத்தில் ஜனாதிபதி எவ்வித கோரிக்கைகளையும் முன்வைக்கவில்லையென, சிங்கப்பூர் ஏ.எப்.பி செய்தி சேவை வெளியிட்டுள்ள செய்தியையும் இதன்போது வாசித்துக் காட்டினார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .