Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
J.A. George / 2021 ஜூன் 15 , பி.ப. 01:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ள நீதியமைச்சு முன்வைத்து யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
நீதித்துறையின் தாமதங்கள் நாட்டில் முக்கிய தீர்மானம்மிக்க கட்டத்தை அண்மித்துள்ளதால், அதற்குத் தாக்கம் செலுத்தும் பிரச்சினைகளைக் கவனத்தில் கொள்வதற்காகவும், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயன்முறையை மீண்டும் உயிர்ப்பூட்டுவதற்கும், வலுவூட்டுவதற்கும் திட்டமிடலுடன் கூடிய, இலக்குகளுக்கமைவான அணுகுமுறையொன்றுக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.
அதற்கமைய, முன் வழக்கு விசாரணை மற்றும் ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபித்தல் தொடர்பான ஆய்வுக் கற்கையை மேற்கொள்வதற்காக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி ருவன் பெர்ணான்டோ தலைமையில் நீதியமைச்சர் குழுவொன்றை நியமித்துள்ளார்.
குறித்த குழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளைக் கருத்தில் கொண்டு, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நீதியமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
ஆரம்பநிலை நீதிமன்றங்களை தாபிப்பதற்குத் தேவையான சட்ட ஏற்பாடுகளை வகுக்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதித்துறை சட்டத்தை திருத்தம் செய்தல்.
ஆரம்பநிலை நீதிமன்றங்கள் தொடர்பான விசேட நடைமுறைகளுக்கான ஏற்பாடுகளை வகுப்பதற்காக புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் சட்டமூலத்தை தயாரித்தல் ஆகிய யோசனைகளுக்கு இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
37 minute ago
41 minute ago
47 minute ago