2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

’குழப்பாமல் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்’

Freelancer   / 2022 ஜூலை 06 , மு.ப. 07:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ்வரி விஜயனந்தன்

தற்போது சர்வகட்சி அரசாங்கம் ஒன்றே நாட்டில் உள்ளது. இந்த அரசாங்கம் முன்னெடுக்கும்செயற்பாடுகளை ஏனைய அனைத்து கட்சிகளும் குழப்பாமல் ஒத்தழைப்பு வழங்க வேண்டும் என தெரிவித்த அமைச்சரும் அமைச்சரவை இணைப் பேச்சாளருமான மஹிந்த அமரவீர, இன்னும் 6 மாதங்களில் நாட்டின் நிலைமை முழுமையாக மாறும் என்றார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று (5) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளைஅறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதமரானவுடன் சகல கட்சிகளும் அவருக்கு தேவையான உதவிகளை வழங்குவதாகத் தெரிவித்து அவரை வாழ்த்தி அது தொடர்பில் அறிக்கைகளும் விடுத்தனர். அவை அனைத்தும் எம்மிடம் உள்ளன. எனவே அவர்கள் கூறிய ஒத்துழைப்பை வழங்குவதே அவசியமானதாகும்.

எமக்கு அரசியல் செய்வதற்கு நாடொன்று இருக்க வேண்டும். அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்தஅரசாங்கம் எது? அடுத்து என்ன நடக்கப்போகிறது என பார்த்துக்கொண்டிருக்காமல் நாடுவீழ்ந்துள்ள நிலையில் சவால்மிக்க சந்தர்ப்பத்தில் சகல மக்கள் பிரதிநிதிகளும் பொறுப்பைஏற்றுக்கொள்ள வேண்டும். அதனால் 225பேர் மீதும் மக்கள் குற்றஞ்சுமத்துகின்றனர். அந்த குற்றச்சாட்டிலிருந்து மீள வேண்டுமாயின் தற்போதைய நிலையில் அரசியல் சாயங்களை பூசிக்கொள்ளாமல் சகலரும் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் வேலைத்திட்டங்களுக்கு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

புதிய பிரதமர் நியமிக்கப்பட்டு 6 வாரங்களே சென்றுள்ளன.6 மாதங்கள் அவரிடம் ஒப்படைத்துபாருங்கள். இந்த அரசாங்கத்திடம் நாட்டை ஒப்படைத்து பாருங்கள். தற்போது இருக்கும் நிலையிலிருந்து முழுமையான மாற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .