Nirosh / 2021 செப்டெம்பர் 19 , பி.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்வி பொது தரா தர உயர்தரம், சாதாரண தர மாணவர்களுக்காக பாடசாலைகளை விரைவாக மீள திறக்க வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக்க ரணவக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
உயர்தரம், சாதாரண தரம் மாணவர்களுக்கு முக்கியத்துவமளித்து பைஸர் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும். இந்த வருடம் நடைபெறுவதற்கு இருந்த உயர்தர பரீட்சைகள் ஒக்டோபர், நொவம்பர் மாதம்வரையில் காலந்தாழ்த்தப்பட்டுள்ளது. பரீட்சைகளுக்கு என உரிய திகதி இதுவரையில் தீர்மானிக்கப்படாத நிலையில் பாடசாலைகளை திறப்ப தொடர்பில் அரசாங்கம் பேசுவதாகவும் தெரிவித்தார்.
பாடசாலை மாணவர்கள் அனைவருக்கும் தடுப்பூசிகளை செலுத்தி அதிபர், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வுகளை வழங்கி அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
பிள்ளைகளின் வாழ்க்கையோடு விளையாடுவதை நிறுத்திவிட்டு, விரைவாக அவர்களுக்கு பைஸர் தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் எனவும் அவர் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டார்.

7 hours ago
9 hours ago
30 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
30 Oct 2025