J.A. George / 2021 ஜூன் 07 , மு.ப. 09:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்த சந்தேக நபர் உயிரிழந்துள்ளார்.
பாணந்துறை பகுதியில் இந்த சம்பவம் நேற்று (06) இடம்பெற்ற நிலையில், சம்பவம் தொடர்பில் இருவர் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபரை கைது செய்த உப பொலிஸ் அதிகாரியும் பொலிஸ் பரிசோதகரும் இவ்வாறு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இன்று(07) தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டினை மீறிய குற்றச்சாட்டில் 48 வயதான குறித்த சந்தேக நபர் நேற்று (06) கைது செய்யப்பட்டு பொலிஸாரின் வாகனத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த நபர் பொலிஸாரின் வாகனத்தில் இருந்து வெளியே பாய்ந்தபோது கடும் காயங்களுக்குள்ளான நிலையில் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
எனினும் சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்று மாலை உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
26 Oct 2025