2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

’ரத்வத்தவை கைது செய்வதில் காலத்தாமதம்’

Nirosh   / 2021 செப்டெம்பர் 20 , பி.ப. 09:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுமதியில்லாது இரு சிறைச்சாலைகளுக்குள் நுழைந்து கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் பதவி விலகியுள்ள இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்தவத்தவுக்கு எதிராக சட்டநடவடிக்கைகளை எடுப்பதற்கு காலத்தாமதம் ஏற்படுவதாக சிறைக் கைதிகளை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேரா தெரிவித்துள்ளார். 

லொஹான் ரத்வத்தவுக்கு எதிராக விரைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ள அவர், இதுத் தொடர்பில் தாம் சி.ஐ.டியில் முறைப்பாடு செய்துள்ள போதிலும் இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இச்சம்பவம் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தொடர உள்ளதாகவும், கைதிகளை அச்சுறுத்திய சம்பவம் இடம்பெற்று ஒருவாரமாகிறது எனவும் அவர் இதன்போது எடுத்துரைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .