S. Shivany / 2020 டிசெம்பர் 28 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.யூ.எம்.சனூன்
கொரோனா தொற்றால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதை நிறுத்தி, இஸ்லாமிய முறைப்படி நல்லடக்கம் செய்வதற்கு அனுமதியளிக்குமாறு கோரி, புத்தளம் கொழும்பு முகத்திடலில் இன்று (28) பாரிய ஆ ர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, சுகாதார அமைச்சர் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இந்த வேண்டுகோளை முன்வைப்பதற்காகவே, அமைதியான முறையில் இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்ததாக, பொதுமக்கள் தெரிவித்தனர்.
புத்தளம் ஐக்கிய மக்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் சர்வமத ஒன்றிய தலைவர்கள, சமயத் தலைமைகள், அரசியல் தலைமைகள் உள்ளிட்ட இன,மத அரசியல் வேறுபாடின்றி பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .