2021 செப்டெம்பர் 21, செவ்வாய்க்கிழமை

ரயில் சேவைகள் நாளை இடம்பெறும்

Nirosh   / 2021 ஜூன் 20 , பி.ப. 08:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தாக்கத்தின் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த ரயில்சேவைகள் நாளை  (21) முதல் மீண்டும் இடம்பெறும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான ரயில் சேவை, மறுஅறிவித்தல் வரைக்கும்  நிறுத்தப்பட்டுள்ளது. முதற் கட்டமாக மேல் மாகாணத்துக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய நாளை காலை மற்றும் மாலை அலுவலக சேவையில் 34 ரயில்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

இதற்கு மேலதிகமாக, கண்டி, அநுராதபுரம், மஹவ மற்றும் பொல்ஹாவலயில் தலா ஒரு ரயில்கள் என்றடிப்படையில் சேவையில் ஈடுபடும். அத்தியாவசிய சேவையில் ஈடுபட அனுமதி பெற்றுள்ளவர்கள் மாத்திரம் ரயில் சேவையை பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களை, பொதுப் பயணிகள் அனைவரும் கடுமையான முறையில் பின்பற்ற வேண்டும்.

ரயில் பெட்டிகள் மற்றும் ரயில்  நிலையங்கள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களில் கடந்த காலங்களில் செயற்படுத்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்கள்  தொடர்ச்சியாக  முன்னெடுக்கப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .