2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

மாற்றாரின் கருத்துக்கு நடவடிக்கை இல்லை

Freelancer   / 2021 நவம்பர் 01 , பி.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி என்ற வகையில், ஏனைய கட்சிகள் வெளியிடும் கருத்துக்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காது என்று தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, கட்சிக்குள் உள்ளவர்கள் யாரேனும் விமர்சித்தால், ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் பிரதான கட்சியாக இருந்தாலும், ஏனைய கட்சிகளின் அறிக்கைகள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசியமில்லை என சுட்டிக்காட்டினார்.

கெரவலப்பிட்டிய மின்னிலைய பங்குகளை அமெரிக்க நிறுவனத்திடம் ஒப்படைப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் இரகசியமாக நிறைவேற்றப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .