2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

கொழும்பில் நாளை 7 மணி நேர நீர் வெட்டு

Freelancer   / 2021 நவம்பர் 29 , பி.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பின் பல பகுதிகளில் நாளை இரவு 10 மணி முதல் நாளை மறுதினம் அதிகாலை 05 மணி வரை 07 மணி நேரத்துக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை, இன்று (29) அறிவித்துள்ளது.

மொரகஸ்முல்ல, ராஜகிரிய, ஒபேசேகர, பண்டாரநாயக்கபுர, நாவல - கொஸ்வத்தை பிரதேசங்கள், ராஜகிரிய மற்றும் கொழும்பு திறந்த பல்கலைக்கழக பிரதான வீதி மற்றும் இணைக்கப்பட்ட இடை வீதிகள் ஆகியவற்றில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பராமரிப்பு பணிகள் காரணமாகவே நீர் விநியோகம் தடைப்படும் என்றும் சபை அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .