2022 ஜனவரி 20, வியாழக்கிழமை

பொது போக்குவரத்து முன்னெடுக்கப்படுமா?

J.A. George   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுப் போக்குவரத்து சேவையை தொடர்ந்தும் முன்னெடுக்காமல் இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனை,  போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும், பயணிகள் எதிர்நோக்கியுள்ள சிரமங்கள் தொடர்பில் கொரோனா ஒழிப்பு செயலணிக்கு அறிவித்து, மாகாணங்களுக்கு இடையிலான பொதுப் போக்குவரத்தை வரையறைகளுடன் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இதனைக் கூறியுள்ளார். 

இதேவேளை, தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 31 ஆம் திகதி அதிகாலை 04 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் (20) அறிவிக்கப்பட்டிருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X