2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

தாய் கண்டித்ததால் ஈழத்தமிழ் இளைஞன் தற்கொலை

Freelancer   / 2022 ஜூலை 02 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தில், இராமேஸ்வரம் அடுத்த மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் 22 வயதுடைய இளைஞர் நிரோஷன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மண்டபம் அகதிகள் மறுவாழ்வு  முகாமில் உள்ள நண்பர்களுடன் சேர்ந்து கொண்டு செல்போனில் கேம் விளையாடி சுற்றித் தெரிந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, இளைஞனின் தாய் மகனை கேம் விளையாடுவதை விட்டுவிட்டு வேலைக்கு செல்லுமாறு கண்டித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து தாயின் கண்டிப்பால் மனம் உடைந்த ஈழத் தமிழர் நிரோஷன் தனது வீட்டில் இருந்த எலி பேஸ்ட்டை  தண்ணீரில் கலந்து வீட்டிற்கு பின்புறம் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு  குடித்து விட்டு படுத்து கிடந்துள்ளார்.

இதையடுத்து மயக்க நிலையில் இருந்த  நிரோஷனை அவரது நண்பர்கள் மண்டபம்  முகாமில் உள்ள அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அதன் பின்னர் தனியார் வாகன மூலம் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அவரை பரிசோதித்த  மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு உள் நோயாளியாக சிகிச்சையில்  இருந்து வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து உயிரிழந்த இளைஞரின் உடலை  பிரேத பரிசோதனை செய்யப்பட்டு மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமிற்கு கொண்டு வரும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இது குறித்து உயிரிழந்த ஈழத் தமிழர் இளைஞரின் சகோதரி பிரியா கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .