2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

மீண்டும் ஆரம்பிக்கப்படும் பல்கலைக்கழகங்கள்?

Freelancer   / 2021 செப்டெம்பர் 18 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைகழகங்களை மீண்டும் ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சகல பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு இரண்டு தடுப்பூசிகளும் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் அந்தந்த மாவட்ட சுகாதார சேவைகள் மத்திய நிலையத்தினை தொடர்பு கொண்டு விரைவில் தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு சகல பல்கலைக்கழகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தும் செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து பல்கலைக்கழக சுகாதார துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடி பல்கலைக்கழகங்களை மீள திறப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X