Freelancer / 2021 டிசெம்பர் 02 , பி.ப. 09:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின் உற்பத்தி நிலையங்களில் பணிபுரியும் பொறியியலாளர்களும் எதிர்காலத்தில் கடமையில் இருந்து நீக்கப்படுவார்கள் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கையின் போதும் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் செயற்பாட்டுப் பிரிவின் பொறியியலாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த போதும் அடுத்த கட்ட நடவடிக்கையாக அவர்கள் பணியிலிருந்து நீக்கப்படுவார்கள் எனவும் பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கையானது படிப்படியாக தீவிரப்படுத்தப்பட்டு இறுதியில் வேலைநிறுத்தம் செய்யப்படும் வரை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
வேலைநிறுத்தம் நடத்தப்பட்டால் நாடு முழுவதும் இருளில் மூழ்கிவிடும் என்றார்.
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago