2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ள 9 வைத்தியசாலைகள்

J.A. George   / 2021 ஜூன் 15 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட 9 மாவட்ட பொது வைத்தியசாலைகளை சுகாதார அமைச்சின் கீழ் கொண்டு வருவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

மாகாண சபைகள் ஊடாக நிர்வகிக்கப்படும் 09 வைத்தியசாலைகளையே இவ்வாறு சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளன.

மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு, மாத்தளை, நாவலப்பிட்டி, எம்பிலிபிட்டிய, அவிசாவளை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்ட பொது வைத்தியசாலைகளே சுகாதார அமைச்சின் கீழ் கொண்டுவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .