2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

ஜயந்த கெட்டகொட எம்.பியாக பதவியேற்றார்

J.A. George   / 2021 செப்டெம்பர் 21 , மு.ப. 10:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜயந்த கெட்டகொட பாராளுமன்ற உறுப்பினராக சற்று முன்னர் பதவியேற்றார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் பாராளுமன்ற உறுப்பினராக அவர் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அஜித் நிவாட் கப்ரால் பதவி விலகியதையடுத்து ஏற்பட்ட ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்துக்காக ஜயந்த கெட்டகொட நியமிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்கும் வகையில், ஜயந்த கெட்டகொட தனது தேசியப்பட்டியல் உறுப்புரிமையை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .