2025 செப்டெம்பர் 19, வெள்ளிக்கிழமை

கைதிகள் கூறுவதை ஏற்க முடியாது

Ilango Bharathy   / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சேஹான் செனவிரத்ன

அனுராதபுரம் சிறைச்சாலையில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் நியாயமான
விசாரணைகள் இடம்பெற வேண்டும் என்பதற்காக விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சர்,
தனது அமைச்சுப் பதவியிலிருந்து விலகியுள்ளதாகத் தெரிவித்த போக்குவரத்து இராஜாங்க
அமைச்சர் திலும் அமுனுகம, கைதிகள் தெரிவிக்கும் கருத்துகளை அடிப்படையாக வைத்து,
விமர்சனங்கள் எழுந்தால், அதை உண்மை என ஏற்க முடியாது என்றார்.

கண்டி மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
அரச நிறுவனங்களுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகளுக்கு அரசியல் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்ற முடியாதெனின் அவர்கள் பதவி விலகலாம்.

சகல அரச நிறுவனங்களிலிருந்தும் சிறந்த செயற்பாட்டை எதிர்பார்க்கிறேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ அறிவித்துள்ள நிலையில், அதற்கு ஈடுகொடுத்து செயற்பட முடியாத சிலரே பதவி விலகுகின்றனர் என்றார்.

தாம் வேலை செய்யவில்லை எனபுரிந்துக்கொண்டவர்கள் பதவி விலகுகின்றனர். பதவி
வழங்குவதைப் போன்றே பதவியும் நீக்கப்படுவர். இது இந்த அரசாங்கத்தில் மாத்திரம்
இடம்பெறும் செயல்அல்ல. வேலை செய்யக் கூடியவர்களை வைத்துக்கொள்ளுவோம் என்றார்.

சிங்கப்பூர் பிரஜை ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்து, பிணைமுறி மோசடி மூலம்
மத்திய வங்கியை வெறுமையாக்க உதவிய கடந்த நல்லாட்சி அரசாங்கம், இன்று கப்ரால்
நியமிக்கப்பட்டமையை விமர்சிக்கின்றது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரம்
வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அனுபவம், தேர்ச்சி உள்ள ஒருவரையே ஆளுநராக இந்த
அரசாங்கம் நியமித்துள்ளது என்றார்.

எனவே, தொற்றால் வீதிக்கு இறங்காமல் வீடுகளுக்குள் ஒளிந்திருக்கும் எதிர்க்கட்சிக்கு நாட்டின் நிலை புரியவில்லை என தெரிவித்த அவர், தொற்றையும் அபிவிருத்தியையும் உரிய முறையில் முகாமைத்துவம் செய்ய அரசாங்கத்துக்கு முடிந்துள்ளது என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X