2023 செப்டெம்பர் 27, புதன்கிழமை

சீமெந்து விலை தொடர்பில் வெளியான தகவல்

J.A. George   / 2023 ஜூன் 02 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மற்றும் கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலை அடுத்த சில நாட்களில் குறைக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் உற்பத்தி நிறுவனங்களிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

50 கிலோகிராம் எடையுள்ள சீமெந்து மூடைக்கு, குறைந்தபட்சம், 300 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விலையை குறைக்குமாறு உற்பத்தியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொங்கிரீட் இரும்பு கம்பிகளின் விலையையும் குறைப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உற்பத்தியாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .