2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

‘ஒரே கடிதத்தில் இராஜினாமா கொடுத்தோம்; மகாநாயக்க தேரர்களை சந்திப்போம்’

Editorial   / 2019 ஜூன் 06 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஸ்லிம் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர், ஆகிய ஒன்பது பேரும், தங்களுடைய இராஜினாமா தொடர்பில், ஒரே கடிதத்தில் கொடுத்திருந்தோம் என்று தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அரசமைப்பின் பிரகாரம் தனித்தனியாக இராஜினாமா கடிதங்களை கொடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளனர் என்றார்.

இதேவேளை, மகாநாயக்க தேரர் உள்ளிட்ட சங்க சபையின் அறிவுறுத்தல் தொடர்பிலான தேரர்களை சந்தித்து, தங்களுடைய நிலை​ப்பாட்டை அறிவிப்போம் என்றும் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் வி​சேட அறிவித்தல் விடுத்து, உரையாற்றும் போ​தே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .