2022 மே 18, புதன்கிழமை

வார நாட்களில் இரவு ஊரடங்கு அமுல்

Editorial   / 2022 ஜனவரி 05 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒமிக்ரோன் தொற்று மிகவேகமாக பரவிவரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் அதிரடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் வார நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில், பால், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ், அமரர் ஊர்தி, ஏ.டி.எம். போன்ற அவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

இரவு ஊரடங்கு நேரத்தில் (இரவு 10 மணிக்கு மேல்) கடைகள், உணவகங்கள், வணிக வளாகங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செயல்பட அனுமதி இல்லையென தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும், 1ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மழலையர் காப்பகங்கள் (Creche) தவிர, மழலையர் விளையாட்டுப் பள்ளிகள் (Play Schools), நர்சரிப் பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

உற்பத்தி தொழிற்சாலைகள், IT சேவை உள்ளிட்ட நிறுவனங்கள் செயல்பட அனுமதி. பணிக்கு செல்லும் பணியாளர்கள் தொடர்புடைய நிறுவனங்களால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும். IT நிறுவனங்கள் தங்களது பணியாளர்களுக்கு WFH ஏற்பாடு செய்ய வேண்டுமென தமிழக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .