2023 மே 30, செவ்வாய்க்கிழமை

ஏழு வெந்நீர் ஊற்றும் பறிபோகும் அபாயம்

Editorial   / 2023 மார்ச் 15 , பி.ப. 01:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராவணன் தன் தாயின் இறுதி கிரிகைகளுக்காக தனது வாள் கொண்டு உருவாக்கியதாக இலக்கியங்களில் சொல்லப்படும் திருகோணமலை கன்னியா ஏழு வெந்நீர் ஊற்றும் பரிபோகும் அபாயத்தில் தொங்கிக்கொண்டிருக்கின்றது.

அந்த கன்னியா ஏழு வெந்நீர் ஊற்று கிணறுகளை பார்வையிட வருவோரிடம் இருந்து கட்டணம் அறவிடப்படுகின்றது. அதற்காக கட்டணச்சீட்டும் விநியோகிக்கப்படுகின்றது.

வருமான முகாமை மற்றும் பராமரிப்பு  என்பன பெளத்த அடையாளம் இருப்பதாக சொல்லப்பட்டு தொல்பொருள் திணைக்களத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.

விநியோகிக்கப்படும் கட்டணச்சீட்டில், இது அநுராதபுர காலத்தில் பயன்படுத்தியதாகவும், தொல்லியல் சான்றுகளால் நிரூபிக்கப்பட்ட பௌத்த மத வளாகத்தில் இது அமைந்திருக்கிறது என்றும் ​குறிப்பிடப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .