2021 டிசெம்பர் 08, புதன்கிழமை

கோட்டா எதிர்க்கமாட்​டார் மஹிந்​த பொறுப்பேற்கவும்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 21 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மக்களைப் போல மேன்மையான நாட்டை உருவாக்கவே நாம் விரும்பினோம். ஆனால்,
யாருடைய துரதிஸ்டமோ இன்று அனைத்தும் செயழிலந்துள்ளது என தெரிவித்துள்ள
முருதெட்டுவே ஆனந்த தேரர், எனவே பிரதமரே இன்னும் தாமதமாகவில்லை. தேர்தலுக்கு முன்பு இந்த நாட்டை பொறுப்பு எடுங்கள்.

நான் நினைக்கிறேன் அதற்கு கோட்டாபய ராஜபக்‌ஷ எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்.அவ்வாறு
எதிர்ப்பு தெரிவித்தால் அது அவர் நாட்டுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு என தான் கருதுகிறேன்.
எனவே மஹிந்த நாட்டை பொறுப்பேற்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லுங்கள் என்றார்.

கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு
தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர், கொரோனா தொற்றை நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக தான் கருதவில்லை. ஆனால், நாட்டை வழிநடத்தும் தலைவர் அந்த தலைவருக்கு வழங்கப்படும் ஆலோசனைகளின் பலவீனத்தால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ இன்று பாரிய அபகீர்த்திக்கு உள்ளாகியுள்ளார்.

எனவே இனிமேலும் எமது நாடு உன்னதமானத என குரல் கொடுக்க கூடிய ஒருவர் பிரதமர்
மஹிந்த ராஜபக்‌ஷ மாத்திரமே. ஏனெனில் அவர் மக்கள் மனங்களில் வாழ்கிறார். அவர்
மக்களுடன் வாழ்கிறார் என்றார்.

ஜனாதிபதியால் இந்த பயணத்தை தொடரமுடியாது என்பது உறுதியாகியுள்ளது. அவரே அதனை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, நாட்டை மீட்டெடுக்க, பிரதமர் மஹிந்த நாட்டை பொறுப்பேற்க வேண்டும் என்றார்.

ஜனாதிபதி மக்கள் வெறுப்புக்கு ஆளாகியுள்ளார்.  அவரை அவமானப்படுத்த தான் இதை
சொல்லவில்லை. மக்களின் அபிப்ராயத்தை தான் இன்று முன்வருகிறேன். எப்போதும் இல்லாத வகையில் திரும்பும் திசை எங்கும் பிரச்சினை. ஒருபுறம் அதிபர்- ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு, மறுபுறம் உரப் பிரச்சினை, மேலும் பல பிரச்சினைகள்
பண்டாரநாயக்க பிரதமராக இருந்த போது நாட்டில் 460 பணிப்புறக்கணிப்புகள்
முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்திவ்ல்லை.

ஆனால், இன்று முழுதாக நாட்டின்  எதிர்காலம் பாதித்துள்ளது. நாம் பாரிய எதிர்பார்ப்பு
வைத்திருந்தோம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவின் சுபீட்சத்தின் நோக்கம் ஊடாக இந்த நாட்டை கட்டியெழுப்புவார்கள் என்று. ஆனால் இன்று 200 சதவீதம் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்டில் டீ.எஸ். சேனநாயக்க, பண்டாரநாயக்க பரம்பரை, ராஜபக்‌ஷ பரம்பரையினர்
பாரிய சேவைகைளை முன்னெடுத்துள்ளனர். ஆனால், இப்படியே பயணித்தால், ராஜபக்‌ஷ
பரம்பரையும் இத்துடன் முடிவடைந்து விடும் என்பதே எமது அபிப்ராயமாகும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .