Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 செப்டெம்பர் 20 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது பணமில்லாவிட்டால் வீட்டிலிருந்து வேலைசெய்யும் அரச ஊழியர்களுக்கு எவ்வாறு சம்பளம் வழங்க முடியும் எனக் கேள்வியெழுப்பிய அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ, இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவினால் புரியப்பட்டதாகக் கூறப்படும் சம்பவங்கள் தொடர்பில், அரசாங்கம் விசாரணை நடத்தி வருகிறது.
விசாரணை அறிக்கை வருவதற்கு முன்பதாக கருத்துத் தெரிவித்தால் அது தவறு என்றார். ஊரடங்கு உத்தரவை நீட்டிக்காதிருப்பது குறித்து அறிக்கை வெளியிட நான் ஒன்றும் மருத்துவர் கிடையாது. மருத்துவர்கள் மற்றும் பல்வேறு துறைசார் நிபுணர்கள் சொல்வதைக் கேட்டு ஜனாதிபதி சரியான முடிவுகளை எடுக்கிறார் என்றார்.
கொழும்பு டபிள்யு.ஏ. சில்வா மாவத்தை முதல் பாமன்கடை பாலம் வரையான வீதியின் இருபுறமும் மரம் நடும் நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை (19) ஆரம்பிக்கப்பட்டது. அதனைப்பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே
மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த அபிவிருத்திப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதனால் இன்று எதிர்க்கட்சிகள் கூறியவை அனைத்தும் முற்றிலும் பொய்யாகிவிட்டன. அவ்வப்போது
ஏதாவது கருத்தை உருவாக்குவது தான் எதிர்க்கட்சிகளின் முக்கிய
பங்காக இருக்கிறது என்றார்.
தேர்தல் ஒன்று நடந்தால் எதிர்க்கட்சித் தலைவரின் நிலையை நன்றாக அறிந்து கொள்ள முடியும். ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தலை நடத்த வேண்டாம், பாராளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்று சவால் விடுத்த தலைவர்தான் இந்த
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச. அவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் வரை, அது எங்கள் அரசாங்கத்துக்கு நல்லது என்றார்.
இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தூக்கு மேடைக்கு விஜயம் செய்த சம்பவம் மற்றும் அவரது ராஜினாமா குறித்து ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமை்சசர்
சிறைத்துறை அமைச்சர் என்ற வகையில் தூக்கு மேடையைப் பார்க்கச் செல்ல அவருக்கு உரிமை உள்ளது என்று நினைக்கிறேன்.
அமைச்சர் ஒருவர் இவ்வாறு இராஜினாமா செய்வது இதுவே முதல் முறை என்பதே மிகவும் சரியானது. அன்று மத்திய வங்கியை கொள்ளையடித்தவர்கள் இராஜினாமா செய்யவில்லை.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தின் கீழ் இது போன்ற ஒன்று நடந்தது நல்ல விஷயம். இது கட்டுக்கோப்பான அரசாங்கமாகும் என்றார்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago