Freelancer / 2022 ஜூலை 04 , பி.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், யக்கபிட்டியவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவ அதிகாரி ஒருவரால் பொதுமகன் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், இலங்கை இராணுவத்தால் உள்ளக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன தெரிவித்தார்.
இராணுவ அதிகாரி ஒருவர், பொதுமகன் ஒருவரை எட்டி உதைத்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாக பரவியதை அடுத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், அந்த அதிகாரி இலங்கை இராணுவத்தின் லெப்டினன் கேணல் என்றும் தெரியவந்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த ஒரு குழு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்ததாக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் மற்றும் அதிகாரிகளின் கூற்றுப்படி தெரியவந்துள்ளதாக பேச்சாளர் கூறினார்.
பணியில் ஈடுபட்டிருந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகவும் அவர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு வேண்டுமென்றே எரிபொருள் நிலையத்தில் அமைதியின்மையை உருவாக்கி மோதலுக்கு அழைப்பு விடுத்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர் என்றும் சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் தெரிவித்தார்.
25 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
2 hours ago
6 hours ago