Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Freelancer / 2022 ஜூலை 06 , மு.ப. 08:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய திரிபு கொரோனா வைரஸ் மீண்டும் பரவும் அபாயம் உள்ளதால், 4 தடுப்பூசிகளையும் உரிய வகையில் செலுத்திக்கொள்வதே, அதிலிருந்து விடுபடுவதற்கான சிறந்த வழியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தடுப்பூசியை சகல அரச வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் மற்றும் பெயரிடப்பட்டுள்ள தடுப்பூசி மையங்களிலும் செலுத்திக்கொள்ள முடியும்.
கொரோனா 4ஆம் தடுப்பூசியினை செலுத்திக்கொள்வதன் ஊடாக வைரஸ் தொற்றின் பாதிப்பினை குறைத்துக்கொள்ள முடியும் என்பதுடன், மரணம் ஏற்படும் அபாயத்திலிருந்து விடுபட முடியும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன குறிப்பிட்டுள்ளார். (a )
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago