2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

பஸ் தரிப்பிடத்தில் திடீர் மரணம்

Freelancer   / 2021 ஜூலை 27 , பி.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்த ஒருவர் திடீரென சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கதுர, திவிதுர பிரதேசத்தில் வசிக்கும்  குறித்த நபர், எல்பிட்டிய வைத்தியசாலைக்குச் சென்று பின்னர் வீடு திரும்புவதற்காக  இன்று மாலை பஸ் தரிப்பிடத்தில் காத்திருந்தபோதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அவர் அனுமதிக்கப்பட்ட போதும் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .