J.A. George / 2021 ஓகஸ்ட் 04 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை தாக்கி, அவர் மீது உமிழ்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிஉல்ல - புஸ்கொலதெனிய பிரதேசத்தில் இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
கொவிட் தொற்றாளர் ஒருவரின் வீட்டுக்கு கடமை நிமித்தம் சென்றிருந்த, பொது சுகாதார பரிசோதகர் மீது, போதையில் இருந்த நபர் இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
48 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், சந்தேக நபர், குளியாபிட்டிய நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பவுள்ளதாகவும், கிரிவுல்ல பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
28 Jan 2026
28 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 Jan 2026
28 Jan 2026