2021 ஜூலை 30, வெள்ளிக்கிழமை

சீன பிரஜை உள்ளிட்ட நால்வர் சிக்கினர்

J.A. George   / 2021 ஜூன் 21 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடனட்டை மோசடியில் ஈடுபட்ட சீன பிரஜை உள்ளிட்ட 04 பேர் கல்கிஸையில் நேற்று (20)கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

வாடிக்கையாளர் சேவை மையம் அளித்த முறைப்பாட்டினை தொடர்ந்து சந்தேக நபர்களை கல்கிஸை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கல்கிஸையில் உள்ள சந்தேக நபர்களின் இருப்பிடத்தில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் ஒரு மடிக்கணினி,  30 போலி கடனட்டைகள் மற்றும் போலி கடனட்டைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருள்கள் ஆகியவற்றை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் கல்கிஸை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (21) ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .