2021 ஜூலை 31, சனிக்கிழமை

தேசிய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நீடிக்கும்: ஜனாதிபதி

Kanagaraj   / 2016 ஜூலை 30 , பி.ப. 12:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசிய கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் தேசிய அரசாங்கம் 2 வருடங்களுக்கே செயல்படும் என்றிருந்த்து. எனினும், அந்த தேசிய அரசாங்கம் 5 வருடங்களுக்கு நீடிக்கும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பொலன்னாவை யில் இன்று இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதேவேளை, மாவனல்லையில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டின் முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடந்துவரவேண்டிய தேவையில்லை என்றும்  தனது பதவிக்காலம் நிறைவடைந்த்தன் பின்னர் இவ்வாறு பாதயாத்திரை செல்லமாட்டேன் என்றும் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .