2021 செப்டெம்பர் 29, புதன்கிழமை

ஐ.தே.மு. எம்.பிகளுக்கு ஒகஸ்ட் 16 வரை விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 13 , மு.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனநாயகத் தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித்த ஹேரத், அஜித் குமார மற்றும் மாகாணசபை உறுப்பினர் நளின் ஹேவகே உட்பட 10 பேரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவர்கள் நேற்று வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டபோதே காலி நீதிவான் இந்த உத்தரவினைப் பிறப்பித்தார்.

ஜனநாயகத் தேசிய முன்னணியின் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனநாயக தேசிய முன்னணி  காலியில் நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்றை  நடத்தியிருந்தது.

அந்த ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இருவரை விடுவிப்பதற்காக மேற்படி எம்.பிகள் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றபோது அங்கு ஏற்பட்ட மோதலையடுத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .