2021 ஜூலை 28, புதன்கிழமை

வெளிநாடுகளில் அரசியல் புகலிடம் கோரி பொன்சேகா விண்ணப்பம்

Super User   / 2010 ஜனவரி 29 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா அவுஸ்திரேலியா உட்பட வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

எனினும், ஜெனரல் சரத் பொன்சேகா அவுஸ்திரேலியாவிடம் உத்தியோகபூர்வமாக அரசியல் தஞ்சம் கோரவில்லை என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்   ஸ்டீபன் ஸ்மித் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு போதுமான பாதுகாப்பு மற்றும் அவர்  சுதந்திரமாக நடமாட அனுமதியளிக்கப்படவேண்டியது அவசியமெனவும் ஸ்டீபன் ஸ்மித் கூறினார்.  

இலங்கையிலுள்ள அமெரிக்க, பிரிட்டிஷ் தூதரகங்களில் சரத் பொன்சேகா அரசியல் தஞ்சம் கோரியிருந்ததுடன், அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகரிடம் தற்காலிகமாக அரசியல் தஞ்சம் கோருவதற்கு தான்   தீர்மானித்திருப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.

இதேவேளை, ஜெனரல் சரத் பொன்சேகா வெளிநாடுகளுக்கு செல்வதற்கு எந்தவித தடையும் இல்லை என தேசிய பாதுகாப்புக்கான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஸ்மன் குலுகல்ல தெரிவித்தார்.

இதற்கிடையில், விமான நிலையத்தில் இதுவரையில் சரத் பொன்சேகா வெளிநாடுகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கவேண்டுமென தனக்கு எந்தவித அறிவுறுத்தலும் கிடைக்கவில்லை என குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் பி.வி.அபயகோன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .