2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

தேர்தல் சின்னம் குறித்து இந்த வாரம் முடிவு எடுக்கப்படும்;ஜே.வி.பி

Super User   / 2010 பெப்ரவரி 10 , மு.ப. 10:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்த சின்னத்தில், எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது தொடர்பில் இந்த வாரம் முடிவு எடுக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவளித்திருந்ததாக மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த கூறினார். நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் தற்போது கலந்துரையாடல் இடம்பெற்றுவருவதாகவும்  டெயிலிமிரர் இணையத்தளத்திற்கு அவர் தெரிவித்தார்.

ஜெனரல் சரத் பொன்சேகா கைதுசெய்யப்படுவாரென தாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை எனக் கூறிய கே.டி.லால்காந்த, எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிற்கு முன்னர் சரத் பொன்சேகாவை விடுவிப்பதற்கான நடவடிக்கையில் மக்கள் விடுதலை முன்னணி உட்பட அனைத்து எதிர்க்கட்சிகளும் ஈடுபட்டிருப்பதாகவும்  குறிப்பிட்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரிலும், அன்னம் சின்னத்திலும் போட்டியிடுவது தொடர்பில் கலந்துரையாடல்கள் நடைபெற்றுவருவதாகவும் கே.டி.லால்காந்த மேலும் கூறினார்.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .