Super User / 2010 ஓகஸ்ட் 30 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
(யொஹான் பெரேரா)
அரசியலமைப்புத் திருத்த யோசனைகளுக்கான வாக்கெடுப்பிலிருந்து இலங்கை சமசமாஜக் கட்சி விலகியிருக்கும் என அக்கட்சியின் பேச்சாளர் சற்றுமுன் தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற கட்சியின் அரசியல் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
அமைச்சர் திஸ்ஸ விதாரணவும் இக்கூட்டத்தில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தீர்மானம் அரசியல் குழுவினால் ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டதாகவும் அப்பேச்சாளர் கூறினார்.
சமசமாஜக் கட்சி, அதன் முன்னாள் தலைவர் கலாநிதி என்.எம். பெரேராவின் காலத்திலிருந்து நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியை எதிர்த்து வருவதன் அடிப்படையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறினார்.
இக்கட்சியின் சார்பில் அமைச்சர் திஸ்ஸவிதாரணவுடன் கேகாலை மாவட்டத்தை சேர்ந்த வை.ஜி. பத்மசிறியும் நாடாளுமன்ற உறுப்பினராக அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்க்கது.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago