2021 ஜூலை 28, புதன்கிழமை

தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 08 , மு.ப. 09:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜௌபர்கான்)

ஹிஜ்ரி 1,431 புனித ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்த்து தீர்மானிக்கும் மாநாடு நாளை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

நோன்புப் பெருநாள் தொடர்பாக தீர்மானிக்கும் வகையில் அன்றைய தினம் மஃரிப் தொழுகை நேரமாகிய 6.14 மணி தொடக்கம் ஷவ்வால் மாதத்திற்கான தலைப்பிறையை பார்க்குமாறு சகல முஸ்லிம்களையும் கொழும்பு பெரிய பள்ளிவாசல் கேட்டுக்கொள்கிறது.

அவ்வாறு தலைப்பிறையை கண்டவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரிலோ அல்லது, 2432110, 2390783 மற்றும் 0777௩66099 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடனோ தொடர்புகொண்டு அறியத்தருமாறு கொழும்பு பெரிய பள்ளிவாசல் பொதுச் செயலாளர் நதுஷான் ஹஸன் கேட்டுள்ளார். .


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .