Super User / 2011 மார்ச் 30 , மு.ப. 08:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கெலும் பண்டார)
உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கத் தவறியதால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது தடங்கலுக்குள்ளாகி இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் முதலான கட்சிகள் இணைந்து உருவாக்கிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கு விண்ணப்பித்திருந்தது.
எனினும் மேற்படி கட்சிகள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ற கட்சியின் கீழ் செயற்படுவதில் தமக்கு ஆட்சேபனையில்லை என்ற தீர்மானத்தை நிiவேற்றும்படியும் அதை தமக்கு அறிவிக்குமாறும் அக்கட்சிகளிடம் தேர்தல்கள் ஆiணாயளர் கோரியிருந்தார்.
ஆனால,; கூட்டமைப்பிலுள்ள இக்கட்சிகள் அதை செய்வதற்கு தவறியுள்ளன. இதனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வது கடினமானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதுவரை இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்திலேயே தேர்தல்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இது குறித்து த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியிடம் கேட்டபோது, புதிய அரசியல் கட்சியாக பதிவு செய்வதில் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளதாகவும் ஆனால் இக்கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் மேற்படி பதிவுக்காக தொடர்ந்து செயற்பட்டுவ வருவதாகவும் அவர்கூறினார்.
இப்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பில் தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட் ஆகிய மேலும் இரு கட்சிகளும் இணைந்துள்ளன என அவர் கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago