2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

யூரியா தேநீர் அருந்திய மாணவர்கள்

Menaka Mookandi   / 2015 பெப்ரவரி 09 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு, தொன்பொஸ்கோ கைத்தொழில் பயிற்சி நிலையத்தில் தங்கியிருந்து பயிற்சி பெற்றுவரும் மாணவர்கள் 27பேர் திடீர் சுகவீனமுற்ற நிலையில் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பயிற்சி நிலையத்தில் நேற்று மாலை வழங்கப்பட்ட தேநீரை அருந்திய பின்னரே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.

சீனி என்று எண்ணி யூரியா பசளையை தேநீரில் கலந்தமையினாலேயே அதனை அருந்திய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்ததாக பொலிஸார் மேலும் கூறினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .