2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

911 வாகனங்கள் திருப்பி விடப்பட்டன

Freelancer   / 2021 ஒக்டோபர் 17 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல் மாகாணம் உட்பட சில மாகாணங்களில் இருந்து தெற்கு அதிவேக நெடுஞ்சாலையூடாக தென் மாகாணத்துக்குள் நுழைய முயன்ற 911 வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.

சுகாதார வழிகாட்டுதல்களை மீறி சட்டவிரோதமாக பல மாகாணங்களில் இருந்து வருகை தந்த வாகனங்கள், பல பொலிஸ் சோதனைச் சாவடிகளில் இடம்பெற்ற சோதனைகளின் பின்னர் திருப்பி விடப்பட்டதாக மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார்.

அதன்படி, கொழும்பு தெற்கு அதிவேக நெடுஞ்சாலை ஊடாக சட்டவிரோதமாக 585 வாகனங்கள் தென் மாகாணத்துக்குப் பயணிக்க முயன்றதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், புத்தளம், காலி, இரத்தினபுரி மற்றும் கண்டி வீதிகள் உட்பட பல மாகாணங்களுக்கு சட்டவிரோதமாக செல்ல முயன்ற 326 வாகனங்கள் திருப்பிவிடப்பட்டதாகவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .