Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2023 ஜூன் 05 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
சண்முகம் தவசீலன்
ஏ_9 வீதியில் மன்னகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர் குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருகையில்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற ஹயஸ் வாகனம் மன்னகுளம் பகுதியில் முன்னால் பயணித்த டிப்பர் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த விபத்து நேற்று (4) நள்ளிரவு 12 மணியளவில் கனகராயன் குளத்திற்கும் மாங்குளத்திற்கும் இடையில் 212வது கிலோமீற்றர் (மன்னகுளம் ) பகுதியில் இடம்பெற்றுள்ளது.
விபத்தையடுத்து டிப்பர் வாகனம் அங்கிருந்து சென்ற நிலையில் பொதுமக்கள் உதவியுடன் ஹயஸ் வாகனத்திலிருந்த 7 பேர் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு 1990 அம்புலன்ஸ் மூலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
50 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
58 minute ago