2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கட்டுப்பாடுகளுடன் நாடு திறக்கப்படும்; நாளை இறுதி முடிவு

Editorial   / 2021 செப்டெம்பர் 16 , மு.ப. 08:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நீக்கப்படாமல் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அடுத்தவாரம் நாடு திறக்கப்படும் எனத் தெரிவித்துள்ள கொவிட்-19 தொற்றொழிப்பு ஜனாதிபதி செயலணியின் பிரதானியான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, இதுதொடர்பில் நாளை (17) இறுதித் தீர்மானம் எட்டப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில், கொவிட்-19 ஜனாதிபதி செயலணி நாளை கூடவிருக்கிறது. அக்கூட்டத்தில் இறுதித் தீர்மானம் எட்டப்படும்.

  செயலணியின் கடந்த கூட்டத்தின் போது, நாட்டைத் திறப்பதற்கான பரிந்துரைகளை ஜனாதிபதி கோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் நினைவூட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .