2021 ஒக்டோபர் 18, திங்கட்கிழமை

நாட்டுக்கு வந்த 181 பேர் மட்டக்களப்பில் தங்கவைப்பு

Editorial   / 2020 மார்ச் 10 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியா மற்றும் இத்தாலியில் இருந்து வருகை தந்த 181 பேர் கொரோனா வைரஸ் தடுப்பு முகமான  மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகத்துக்கு  அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.

இவர்கள் இன்று (10) காலை  நாட்டை வந்தடைந்துள்ளனர். 

இவ்வாறு வருகை தந்தவர்களில் 179 இலங்கையர்கள் மற்றும் 2 தென்கொரிய நாட்டவர்கள் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதிகாலை 3.33 மணியளவில் குறித்த பயணிகள் விமான நிலையத்தை வந்தடைந்ததாக கட்டுநாயக்க விமான நிலையத்தின் கடமை நேர முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 166 பேரும் பெட்டிக்கலோ கெம்பஸில் தங்கவைக்கப்பட்டு 14 நாட்களுக்கு கண்காணிக்கப்படவுள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் பரவியுள்ள நாடுகளிலிருந்து வருகைதரும் பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்கும் மத்திய நிலையங்கள் தற்போது தயார்செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரான், இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து வருகைதரும் பயணிகள்  பெட்டிக்கலோ கெம்பஸ் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையம் என்பவற்றுக்கு அனுப்பப்படவுள்ளதுடன்,

இந்த நடவடிக்கைகள் இன்று (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .