2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

அதிரடியான கட்டுப்பாடுகள் விதிப்பு: நாட்டை முடக்காது இருக்க முடிவு (முழு விவரமும் இணைப்பு)

Editorial   / 2021 ஓகஸ்ட் 06 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதியுடனான இன்றைய சந்திப்பில், தற்போதைய சுகாதார நிலைமை காரணமாக நாட்டை மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என முடிவு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ள  இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, எனினும்,   சில கட்டுப்பாடுகள் அமுல்படுத்தப்படும் என்றார்.

 இதன்படி, 500 அல்லது 500ற்கு அதிகமானோர் அமரும் வகையிலான திருமண மண்டபமொன்றில் 150 பேரை மாத்திரம் அனுமதிக்கப்படுவோர்.

அத்துடன், 500ற்கு குறைவானோர் அமரும் வகையிலான திருமண மண்டபத்தில் 100 பேரை மாத்திரம் அனுமதிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இறுதிச் சடங்குகளில் பங்கேற்க 25 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

 அரச ஊழியர்கள் அனைவரையும்  அழைக்கும் சுற்றறிக்கையை மாற்றியமைத்து, கடமைக்கு அழைக்கவேண்டிய நபர்களை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கான அதிகாரம் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை,   செப்டம்பர் 1 வரை அனைத்து அரச விழாக்களும் இரத்து செய்யப்பட்டன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .