2021 நவம்பர் 29, திங்கட்கிழமை

கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் புதிய வர்த்தமானி வருகிறது?

Editorial   / 2021 ஓகஸ்ட் 10 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் தற்போது மிகவேகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக, இன்னும் பல கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகளுக்கு மேலதிகமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.

மக்கள் ஒன்றுகூடுவதை மென்மேலும் கட்டுப்படுத்தும் வகையில், புதிய கட்டுப்பாடுகளை அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அறியமுடிகின்றது.

அதுதொடர்பில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்திலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அதுதொடர்பிலான ஆலோசனைகள், சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு, அமைச்சரவை வழங்கியுள்ளது.

அதுதொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல், மிக விரைவில் வெளியிடவிருப்பதாக அறியமுடிகின்றது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .