2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

புதிய வைரஸ் எப்போது வேண்டுமானாலும் நாட்டிற்குள் நுழையும்

Freelancer   / 2021 ஒக்டோபர் 16 , பி.ப. 03:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

புதிய கொரோனா வைரஸ் வகைகள் எப்போதும் நாட்டிற்குள் நுழைவதற்கான சாத்தியம் உள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர்,

நாடு இப்போது சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது, துறைமுகங்கள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.

எனவே, புதிய வைரஸ் வகைகள் நாட்டிற்குள் நுழைந்தால் கணிக்க முடியாததாக  ஆபத்துக்களை ஏற்படுத்தும் என அவர் தெரிவித்தார்.

முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட போதிலும் மக்கள் சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றுவது அவசியம்.

தற்போதைய நிலவரப்படி, மொத்த மக்கள் தொகையில் சுமார் 67 சதவிகிதம் பேர் கோவிட் தடுப்பூசியின் ஒற்றை டோஸைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 58 சதவிகிதம் பேருக்கு இரண்டு அளவுகளும் வழங்கப்பட்டுள்ளன.

நாம் திருப்திகரமான நிலையை அடைய வேண்டுமானால், மொத்த மக்கள்தொகையில் 70 முதல் 80 சதவிகிதம் வரை தடுப்பூசி போடுவது முக்கியம் என அவர் குறிப்பிட்டார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .