2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

நான் ரெடி: ரணிலுக்கு அனுர பதில்

Editorial   / 2022 ஜூலை 06 , பி.ப. 03:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நெருக்கடியில் இருந்து குறுகிய காலத்துக்குள் நாட்டி மீட்டெடுப்பதற்கும் நாட்டை ஸ்திரப்படுத்தவும்  தயாராக இருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தெரிவித்துள்ளது.

நாட்டில் நிலவும் பல்வேறு குறைபாடுகளை குறுகிய காலத்தில் தீர்த்து வைப்பதற்கு தமது கட்சி தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு இன்று (06) கருத்து தெரிவித்த போதே, ஜே.வி.பியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜே.வி.பி தனித்து செயற்பட விரும்பவில்லை என தெரிவித்துள்ள எம்.பி., நாட்டு பிரஜைகளும் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களும் இந்த நோக்கத்திற்காக கட்சிக்கு தமது ஆதரவை வழங்குவார்கள் என நம்புவதாக தெரிவித்தார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மிக நீண்ட காலத்திற்கு பிரதமர் பதவியில் இருக்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“06-மாதங்கள் போன்ற குறுகிய காலத்திற்குள், பொருளாதார நெருக்கடிக்கான முதன்மைக் காரணங்களைச் சரிசெய்து நாட்டை ஸ்திரப்படுத்த முடியும். அதன்பிறகு பொதுத் தேர்தலை நடத்தி, பொதுமக்களின் ஆணையுடன் புதிய அரசை நியமிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய அரசாங்கத்திற்கு மாத்திரமே பொருளாதார நெருக்கடியின் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமென அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

  " பதவிகளை அல்லது தனிநபர்களை மாற்றுவதன் மூலம் இந்த நெருக்கடிகளைத் தீர்க்க முடியாது, குறிப்பாக மக்களின் நம்பிக்கையை இழந்த அரசாங்கத்தின் மூலம் தீர்க்கவே முடியாது " என்றும் அவர் மேலும் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் திஸாநாயக்க தனது பொருளாதார திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிப்பதற்காக பதவி விலகுவதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் ​நேற்று (05) தெரிவித்திருந்தார்.

அது தொடர்பில் வினவியபோது, ​​அந்த பணியை முன்னெடுக்க தயார். எவ்வாறாயினும், சவாலை ஏற்றுக்கொண்டு தனது நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டுமாயின் ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலக வேண்டும் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .