Editorial / 2022 ஓகஸ்ட் 04 , பி.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் பாதுகாப்பானது இந்தியப் பெருங்கடலின் பாதுகாப்போடு பின்னிப் பிணைந்திருப்பதால், சீன உளவுக் கப்பல் இலங்கைக்கு வருவது குறித்து பல சிவப்புக் கொடிகள் உயர்த்தப்பட்டுள்ளதாக தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 11ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் சீன ஆய்வு கப்பல் வருவது தொடர்பில் தற்போது பல்வேறு சர்ச்சைகள் சர்வதேச மட்டத்தில் எழுந்துள்ளன. குறிப்பாக சீன கப்பலின் இலங்கை விஜயத்தை இந்தியா வன்மையாக எதிர்த்து வருவதுடன், அதனை நிறுத்த இராஜதந்திர ரீதியில் முயற்சிகளையும் முன்னெடுத்து வருகின்றது.
எனினும் ஹம்பாந்தோட்டைக்கு வரும் சீனக் கப்பலானது எரிபொருள் நிரப்புவதற்காக வருகிறதாகவும், வேறு எந்த நோக்கத்திற்காகவும் அல்ல என்றும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன கூறியுள்ளதுடன், பிரதமர் தினேஷ் குணவர்தனவும் இந்த சர்ச்சையை நட்பு ரீதியில் கையாளலாம் என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது தெற்காசிய அரசியல் கொள்கைகளுக்கான ஆய்வு நிறுவனம் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இவ்வாறான பதிவொன்றை இட்டுள்ளது. அதில் இந்தியப் பெருங்கடல் மற்றொரு மோதல் புள்ளியாக மாறுகிறதா, அங்கு இந்தியாவின் ஆதிக்கத்தை அதன் சொந்த கொல்லைப்புறமே சவால் விடுகிறதா? என்ற பதிவையும் இட்டுள்ளது.
6 hours ago
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
9 hours ago