2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

ஐ.தே.கவின் முன்னாள் பெண் முக்கியஸ்தர் கைது

Editorial   / 2021 மே 27 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகர சபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன பாகங்களில் மோசடியில் ஈடுபட்டார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

56 வயதான சந்தேகநபரை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

உள்ளூர் சட்டங்களை மீறி சந்தேக நபர் வாகன பாகங்கள் இறக்குமதி செய்து இலங்கையில், ஒரு வாகனத்தை தயாரித்ததாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல்கள் அடிப்படையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .