2022 ஓகஸ்ட் 17, புதன்கிழமை

இந்தியாவின் மேலும் 3 நகரங்களுக்கு ஸ்ரீலங்கன் பயணம்

Yuganthini   / 2017 ஜூலை 13 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவின் முக்கிய மூன்று நகருக்கு "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் ' மேலும் தமது சேவையை விரிவுப்படுத்தியுள்ளது.

இதன் பொருட்டு ஐதராபாத், விசாகபட்டினம், மற்றும் கோயம்புத்தூர் நகரங்களுடன் மொத்தமாக 14 நகரங்களுக்கு தனது சேவையினை "ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் முன்னெடுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்படி விசாகப்பட்டினத்தில் ஜூலை 8ஆம் திகதியும் ஐதராபாத்தில் ஜூலை 12 ஆம் திகதியும் மற்றும் கோயம்புத்தூரில் ஜூலை 16 ஆம் திகதி இந்த விமான சேவையை, தொடங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சென்னை, திருச்சி, திருவனந்தபுரம், மும்பாய், புதுடெல்லி, கயா, மதுரை, வாரணாசி, கொச்சி, பெங்களூர் மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களுக்கு ஒரு வாரத்துக்கு 108 விமான சேவைகளை வழங்க உள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .