2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

மிஹிந்தலை

Amirthapriya   / 2018 ஏப்ரல் 26 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுராதப்புர மாவட்டத்தில் உள்ள மிஹிந்தலை மலையானது, பௌத்த மதத்தவர்களால் பெரிதும் போற்றப்படும் உன்னதமான இடமொன்றாகும். அத்துடன் பௌத்த துறவிகளின் வழிபாட்டிற்குரிய இடமாகவும் இது விளங்குகின்றது.

இதனை சூழ 68 குகை வீடுகள், பௌத்தத் துறவிகளுக்கென அமைக்கப்பட்டதாகவும் அத்துடன் அரசர் சேனாவினால் மருத்தவமனையொன்றும் இப்பகுதியில் அமைக்கப்பட்டதாக வரலாற்று மூலாதாரங்கள் தெரிவிக்கின்றன.

இப்பழைமை வாய்ந்த மருத்துவமனை மற்றும் துறவிகளுக்கான மடங்களுக்கும் அத்துடன் மிஹிந்தலை மலைத் தொடருக்குமிடையில் எல்லை சுவர் ஒன்றும் காணப்படுகின்றது. துறவிகளின் மடத்தின் நுழைவாயிலில் அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய படி வரிசைகள், காவலாளி உருவங்கள் என்பன செதுக்கப்பட்டு காணப்படுகின்றன.

மிஹிந்தலை மலையின் உச்சிக்குச் சென்று பௌத்தத் துறவிகள் தியானங்களில் ஈடுபடுவது வழமையாகக் காணப்பட்டு வந்தது. புத்தப்பெருமானும் இம்மலையின் உச்சியிலிருந்து தியானம் செய்து போதித்தருளினார் என வரலாறு கூறுகின்றது.

இன்றைய காலங்களில் பல சுற்றுலாப் பயணிகள் வருகைத் தரும் இடமொன்றாக இது விளங்குகின்றது. இதற்கு முக்கிய காரணம், இம்மலை உச்சியிலிருந்து மாலை வேளையில், வானத்தை பார்க்கும் பொழுது, சூரிய அஸ்தமனம் மிக அழகாகக் காட்சியளிக்கும். இதனை காண்பதற்காகவே பல சுற்றுலாப் பயணிகள் இங்கு விரைகின்றனர்.

  

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .