2023 ஜூன் 09, வெள்ளிக்கிழமை

மகாவலியை அழகுபடுத்தும் Mahaweli Reach

Gavitha   / 2018 மே 16 , மு.ப. 10:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, கட்டுகஸ்தொட்டை மகாவலி கங்கைக்கு அருகில், பாரிய நிலப்பரப்பில், பசுமையான சுற்றாடலுக்கு மத்தியில், மகாவலி ரீச் ஹோட்டல் அமைந்துள்ளது. 1970களில், தேயிலை பயிரிடுபவரான அதுல் பானபொக்க, தன்னுடைய மனைவி மற்றும் மகன்மாருடன் சேர்ந்து, தன்னுடைய வீட்டையே நான்கு அறைகளாகக் கொண்ட விடுதியாக மாற்றினார்.அந்த விடுதியே, மகாவலி ரீச் என்ற ​பெயரில், கண்டியில் அமைக்கப்பட்ட முதலாவது ஐந்து நட்சத்திர ஹோட்டலாகக் காணப்படுகின்றது. அதுல் பானபொக்கவின் மகன்களான ஜயந்த பானபொக்க மற்றும் மொஹான் பான​பொக்க ஆகியோர் இணைந்தே, வீடாக இருந்த தங்களது மாளிகையை, 112 அறைகளைக் கொண்ட ஐந்துநட்சத்திர ​ஹோட்டலாக மாற்றியுள்ளனர். 112 அறைகளைத் தவிர, மேலும் Presidential Suite ஒன்றும் Junior Suite மூன்றும் இந்த ஹோட்டலில் அமைக்கப்பட்டுள்ளது.

Deluxe Rooms

Executive Suites

இந்த ஹோட்டலில், அன்றைய காலத்தில் அமைக்கப்பட்ட காலனித்துவக் கட்டடக்கலைகள் அனைத்தும், இன்னும் மாற்றப்படாமல், அவ்வாறே வைக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும். மேலும், ஹோட்டலின் மத்தியிலும் வெளிப்புறத்திலும் காணப்படும் பூங்கா, பல்வேறு வகையான பூக்களைக்கொண்டு அமைந்துள்ளமையும் பல்வேறு பழவகை மரங்களைக் கொண்டு அமைந்துள்ளமையும், சுற்றுலா செல்வோருக்கு, இதமான காற்றையும் சுவாசத்தையும் வழங்குகின்றது. இவையனைத்துக்கும் மேலதிகமாக, இலங்கையின் மிகவும் நீளமான ஆறான மகாவலி கங்கைக்கு அருகிலேயே இந்த ஹோட்டல் அமைந்துள்ளது. என​ேவ, நாவுக்கு சுவையான விருந்தை, இயற்கை அழகை இரசித்தபடியே உட்கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.  

அத்தோடு, மகாவலி ரீச் ஹோட்டலில் தங்கும் சுற்றுலாப்பயணிகளுக்கு, ஸ்ரீ தலதா மாளிகை, பேராதெனிய தாவரவியல் பூங்கா, ஹந்தானை உள்ளிட்ட உடவட்ட வனம் போன்றவற்றை, சிறிய அளவு தூரத்துக்கு பயணத்தை மேற்கொண்டு பார்த்துவிட்டு திரும்பக்கூடியதாக உள்ளது.

இந்த ஹோட்டலில், சுற்றுலாப்பயணிகள் அல்லாதோருக்கும் பல சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டிலிருந்து வருவோரை, விமானநிலையத்தில் இருந்து ஹோட்டலுக்கு அழைத்து வருதல் போன்ற போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. அத்தோடு, வெளியிடங்களில் முன்னெடுக்கப்படும் விசேட நிகழ்வுகளுக்கு கேட்டரிங் சேவை, கேக் தயாரித்து வழங்குதல், பூங்கொத்து வடிவமைத்தல் போன்ற சேவைகளும் வழங்கப்படுகின்றன. அத்தோடு, ஹோட்டலிலுள்ள உடற்பயிற்சிக்கூடத்தில், வெளியாட்கள் வருடாந்தம் அல்லது நாளாந்தக் கட்டணங்களைச் செலுத்தி பயன்படுத்தக்கூடியதோடு, அங்குள்ள Spa, ​மேசை பந்தாடல், நீச்சல் தடாகம் போன்றவற்றையும் கட்டணங்கள் செலுத்தி பயன்படுத்தக்கூடியதாகவுமுள்ளது.  அத்தோடு, ஆடை சலவை சேவைகளையும் ஹோட்டல் வழங்கி வருகின்றது.  

Uyana Restaurant என்று அழைக்கப்படும் ஹோட்டலின் உணவகத்தில், காலை மற்றும் இரவு வேலைகளில் Buffetஇல், இலங்கை உள்ளிட்ட உலகளவிலுள்ள பிரசித்தமான உணவுகளும் வைக்கப்படுகின்றன. இந்த உணவகத்தில், கூட்டுறவு நிறுவனங்கள், பிறந்தநாள் நிகழ்வுகள், பிரியாவிடை நிகழ்வுகள் மற்றும் அனைத்து மத திருமணங்கள் என்று நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அத்தோடு, ஹோட்டலின் முதலாவது மாடியில் அமைந்துள்ள பெருவிருந்து மண்டபத்தில் (Banquet hall) சுமார் 300 பேர் அமரக்கூடிய வகையிலான நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், நீச்சல் தடாகத்தை சுற்றியுள்ள Pool Terrace என்று அழைக்கப்படும் பகுதியிலும் பல்வேறு வகையான நிகழ்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அத்தோடு, திருமணமான புதுமணத்தம்பதிகள், தங்களது தேநிலவைக் கொண்டாடுவதற்கு, மிகச் சிறந்த இடமாகவும் இந்த ஹோட்டல் காணப்படுகின்றது.  

கண்டியில் அமைக்கப்பட்ட முதலாவது பச்சை ஹோட்டல் (Green Hotel) என்று ​அழைக்கப்படும் இந்த மகாவலி ரீச் ஹோட்டல், பல்வேறான சமூக சேவைகளையும் செய்து வருகின்றது. கட்டுகஸ்தோட்டையின் மகாவலி ஆற்றை சுத்தம் செய்யும் பணியை, சர்வதேச நீர் தினத்தன்று, ஹோட்டல் ஊழியர்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்திருந்தனர். மரம் நடுதல், கண்டி பகுதியில் அமைந்துள்ள பாதுகாப்பற்ற ரயில் கடவைக்கு, பாதுகாப்பு வாயில் அமைத்து, அங்குள்ள ஊழியர்களுக்கு கட்டணம் செலுத்துதல் போன்ற பல்வேறு சமூக சேவைகள் ​ஹோட்டலால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஹோட்டலின் தரம், சேவை உள்ளிட்ட சமூகப் பொறுப்புகளுக்கென்று, ஹோட்டல் பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளது. 1998 மற்றும் 2004 தொடக்கம் 2008 வரையான ஆண்டுகளில், சிறந்த உணவுக்கான விருதை ஹோட்டல் பெற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு, சரியான நீர் முகாமைத்துவம், காபன் வெளியேற்றம் மற்றும் கழிவகற்றல் முகாமைத்துவம் போன்றவற்றை, சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முகாமை செய்து வருகின்றமைக்கு, 2018ஆம் ஆண்டு, ஹோட்டலுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.  

வாரத்துக்கு அல்லது மாதத்துக்கு ஒருமுறை, விசேடதேவையுடையோர் உள்ளடங்கிய இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சியும் இடம்பெறுகின்றது. அத்தோடு, ஹோட்டலின் விசேட கேக் வகைகளை தயாரிப்பவரும், விசேட தேவையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. கண்டிய பாரம்பரியத்தையும் மேற்கத்திய பாரம்பரியத்தையும் கொண்ட இந்த ஹோட்டலில், விடுமுறை நாட்களை கழிப்பதற்கு மிகச் சிறந்த இடமாக உள்ளது. உங்கள் ஓய்வான நாட்களில் மேலும் சௌகரியமான இடம் தற்போது கிடைத்துவிட்டதல்லவா.  

மகாவலி ரீச் தொடர்பான மேலதிக விடயங்களை, www.mahaweli.com என்ற இணையத்தளத்தினூடாகவும் https://www.facebook.com/MahaweliReachHotel என்ற பேஸ்புக் பக்கத்தினூடாகவும் தெரிந்துகொள்ள முடியும். அல்லது, 0812472727/ 081 4471883 / 5 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொள்வதினூடாகவோ, mareach@slt.lk/ sales@mahaweli.com ​போன்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலமோ, தகவல்களைப் பெற்றுக்கொள் முடியும் என்பதோடு, இலக்கம் 35 P B A Weerakoon Mawatha, Kandy என்ற முகவரியில் அமைந்துள்ள மகாவலி ரீச் ஹோட்டலுக்கு நேரடியாக விஜயத்தை மேற்கொண்டோ பெற்றுக்கொள்ள முடியும். 

 

மகாவலி ரீச்சில் உங்களுக்கு ஒரு வாய்ப்பு!!

இயற்கை எழிலுடன் கூடிய இந்த ஹோட்டலில், நீங்களும் ஒரு நாளைக் கழிக்கவேண்டும் என்று ஆசைப்படுகின்றீர்களா? இதோ உங்களுக்கான ஒரு வாய்ப்பு.  

தமிழ்மிரர் பத்திரிகையில், இன்று (16) பிரசுரிக்கப்பட்ட இந்தக் கட்டுரையை, பத்திரிகையுடன் சமர்ப்பிப்பதனூடாகவும் அல்லது தமிழ்மிரர் ​இணையத்தளத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டுரையை, உங்களது பேஸ்புக் பக்கத்தில், #mahawelireach #mahawelireachsrilanka #mahawelireachhotel மற்றும் #tamilmirror போன்றவற்றை ஹேஷ்டெக் செய்து பகிருவதன் மூலமும், எதிர்வரும் 18ஆம் திகதி முதல் ஜூலை மாதம் 18ஆம் திகதி வரையான இரண்டு மாதக் காலப்பகுதிகளில், ஹோட்டல் அறைகளுக்கு  30 சதவீதக்கழி​வை  (நிபந்தனைகளுக்கும் விதிமுறைகளுக்கும் உட்பட்டது) பெற்றுக்கொள்ள முடியும்.

பேஸ்புக்கில் பகிரப்பட்ட பின்னர், ஹோட்டலில், உங்களுக்கான அறை ஒதுக்கீடுளை மேற்கொள்ளும் போது, உங்களது பேஸ்புக் பக்கத்தில், தமிழ்மிரரில் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை பகிரப்பட்டுள்ளமையை, உறுதி செய்யவேண்டும் அல்லது பத்திரி​கையை ஹோட்டலில் சமர்ப்பிக்கவேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .